“மக்களின் தேவை கருதி பணியாற்ற முடியாவிட்டால் விலகிவிடுங்கள். எனது பொறுமையை சோதிக்க வேண்டாம். புதியவர்களை நியமித்து நாம் அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுக்கிறோம்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,அரச அதிகாரிகளிடம் கோபமான தொனியில் பேசியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் மொரவக்கையில் நேற்று (13) நடைபெற்றது. இதன்போதே பிரதமர், திட்டமிடலின் அடிப்படையில் செயற்படவில்லை என அதிகாரிகளைக் குற்றம் சுமத்தினார்.
அத்துடன் குறித்த நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் காலக்கெடு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.