எனக்கும், நயன்தாராவுக்கும் பிரச்சனை தான்- மனம் திறந்து பேசிய த்ரிஷா
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. சினிமாவில் போட்டியில் இருக்கும் இவர்களுக்குள் நிஜமாகவே பிரச்சனைகளும் வந்திருக்கிறது.
தற்போது அதைப்பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் த்ரிஷா.
எங்களுக்கு இடையே நிறைய பிரச்சனை உள்ளது என்று கூறப்படுவது எல்லாம் மீடியா உருவாக்கியது தான். எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பிரச்சனை இருந்தது. அது குறித்து நான் பேச விரும்பவில்லை. அந்த பிரச்சனைக்கு தொழில் காரணம் அல்ல என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.