ஐ.பி.எல் ஓரளவுக்கு கணிக்க முடியும் நிலைமைக்கு வந்திருக்கிறது. எந்த டீம் கெத்து, எந்த ப்ளேயர் வெய்ட்டு, எந்த பவுலர் ரைட்டு என்பதை கொஞ்சம் கணிக்க முடிகிறது. அந்த வகையில் சென்னையும் ராஜஸ்தானும் மோதிய மேட்ச்சில் சென்னை ஜெயிக்கும் என்பதே நிலைமை. ஆனால், இப்படி ஒரு ‘வாவ்’ வெற்றியை தோனியே நினைத்திருக்க மாட்டார்.
“இனி நம்ம ஊரு புனே… இன்னைக்கு எதிரி கோன் ஹே” என மஞ்சள் ஆர்மி கெத்து காட்டியது. ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்றாலும் நல்ல கூட்டம். டாஸ் ஜெயித்த ரஹானேவை தோனி “அதான” என்பது போல பாக்க, ‘அதேதான்’ என சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன். சென்னை அணியில் விஜய்க்கு பதிலாக ரெய்னாவும், ஹர்பஜனுக்கு பதிலாக கார்ன் ஷர்மாவும் மாறியிருந்தார்கள். ராஜஸ்தானிலும் இரண்டு மாற்றங்கள். சென்ற போட்டியில் நன்றாக ஆடியும் ஷார்ட்டுக்கு பதிலாக க்ளாஸினும் குல்கர்னிக்கு பதில் பின்னியும் களமிறங்கினார்கள்.