எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாட்களில் கொழும்பு அரசியலின் பேசுப்பொருளாக அரசியல்வாதிகளின் கட்சி தாவல் செயற்பாடு காணப்பட்டது.
அரசாங்கத்துடன் இணையவுள்ள எதிர்கட்சி உறுப்பினர்கள்
எதிர்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகிய போதும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ அதனை மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ள விருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பிரகாரம் ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரே இவ்வாறு கட்சி மாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.