எதிரணி வீரர்களுடன் எப்படி வார்த்தை போரில் ஈடுபடுவது என்பது குறித்து கற்று வருகிறேன்,’’ என, புஜாரா தெரிவித்தார்.
இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா, 29. வீரர்கள் அறையில் எப்போதும் அமைதியாக காணப்படுவார். குறைவாக பேசும் இவர், பேட்டில் தான் அதிகம் பேசுவார். இலங்கை தொடரில், முதல் இரு டெஸ்டில், இரு சதம் உட்பட, 301 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போது களத்தில் எதிரணி வீரர்களை வம்பிழுப்பது எப்படி என கற்று வருகிறாராம். இதுகுறித்து புஜாரா கூறியது:
போட்டி மந்தமான சூழலில் சென்று கொண்டிருக்கும் போது, புதிய உத்வேகத்துடன் செயல்பட, எதிரணி வீரர்களுடன் ஏற்படும் வார்த்தைப் போர் உதவியாக இருக்கும்.
ஏனெனில், இது பவுலர்களுக்கு மிகவும் கைகொடுக்கும். அதேநேரம் இது தனிப்பட்ட வீரர் மீதான தாக்குதலாக இருக்கக் கூடாது. தவிர, பீல்டர்களும் உற்சாகமாக செயல்படலாம்.
இதனால், சிறிதளவு வார்த்தைப் போர், எதிரணி வீரர்களுடன் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதை எப்படி சரியாகச் செய்வது என, இன்னும் நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு புஜாரா கூறினார்.