தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டமானது மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸான எச்.ஐ.வி (HIV) பரிசோதனைக்கான இணைய முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ் இணைய முன்பதிவு முறையானது எச்.ஐ.வி பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய விரும்பும் மக்களுக்கு மிகவும் வசதியான வழிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் இணைந்து நடத்திய கூட்டுறவின் போது இவ் இணைய முன்பதிவு முறை தொடங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணைய அமைப்பு மூலம் பதிவு செய்த நபர்களின் விப ரங்கள் மற்றும் பெயர் என்பவற்றினை அறிய முடியாது என்பது இவ் திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் பராமரிப்பு சேவைகள் இலங்கை முழுவதும் நிறுவப்பட்டுள்ளன எனவே, எச்.ஐ.வி பரிசோதனை செய்ய விரும்புவோர் (www.know4sure.lk) என்ற இணையதளத்தின் ஊடாக பார்வையிடலாம்.
மேலும் ‘0716379192‘ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் எச்.ஐ.வி சுய பரிசோதனை கருவிகளை இல்லத்திற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பில் டொக்டர் தர்ஷனி மல்லிகாராச்சி தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது சுமார் 3,700 பேர் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், புதிதாக பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேலும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுபவர்கள், மருந்து மற்றும் ஊசி போன்றவற்றை பயன்படுத்துபவர்கள், கடலோரப் பணியாளர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என அவர் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]