கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கடந்த ஒரு வாரகாலமாக கணிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் , கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதமும் அதிகரித்துள்ளது.
ஏனையவர்களுடன் ஒப்பிடும் போது கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளானால் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகும் வீதம் 5 மடங்கு அதிகமாகும்.
எனவே இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ கொடகந்தகே தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (8 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் கடந்த ஆகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களை ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 மடங்கு வீழ்ச்சியடைந்திருந்தது.
எனினும் தற்போது தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும் போது கர்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளது.
ஏனையவர்களுடன் ஒப்பிடும் போது கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளானால் அவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் வீதம் 5 மடங்கு அதிகமாகும்.
எனவே அபாயத்தை கவனத்தில் கொண்டு அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானமாக செயற்பட வேண்டும்.
இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு செயற்படாவிட்டால் அபாயம் மேலும் அதிகரிக்கும்.
தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் போது கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.
எனினும் இதுவரையில் நூறு வீதம் தடுப்பூசி வழங்கப்படவில்லை. கணிசமானளவு கர்ப்பிணிகள் இதுவரையிலும் எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றமையே இதற்கான காரணமாகும்.
எனவே தற்போதாவது துரிதமாகச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 இலிருந்து 600 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லையாயின் 4 ஆவது அலையை நோக்கிச் செல்ல வேண்டியேற்படும்.
எனவே அடிப்படை சுகாதார விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டு;ம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]