இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கம் வந்தாலே சூர்யா ரசிகர்கள் ஒரேயொரு கேள்வியை தான் அவரிடம் கேட்கிறார்கள். விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை எடுக்கிறார், எடுக்கிறார், எடுத்துக் கொண்டே இருக்கிறார். அன்பான இயக்குனரே எப்பதாங்க படத்தை ரிலீஸ் செய்வீங்க என்பதே சூர்யா ரசிகர்கள் விக்கியிடம் அடிக்கடி கேட்கும் ஒரே கேள்வி. இந்நிலையில் விக்கி மீண்டும் சூர்யா ரசிகர்களிடம் சிக்கிவிட்டார்.
மேயாத மான் படம் பார்த்த விக்னேஷ் சிவன் அதை பாராட்டி ட்வீட் போட்டார். தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள் என்று பரிந்துரைத்தார் விக்கி.
வெயிட்டிங் விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர் ஒருவர் அன்பான இயக்குனர் தானா சேர்ந்த கூட்டத்திற்காக வெயிட்டிங் என்று கமெண்ட் போட்டுள்ளார்.
நீங்க இன்னும் தூங்கலையா என்று ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனிடம் கேட்டுள்ளார்.