காலஞ் சென்ற எகிப்து ஜனாதிபதி முஹம்மத் முர்சியின் இளைய மகன் அப்துல்லா முர்ஸியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் கைரோவிலுள்ள வைத்தியசாலையில் வைத்தே இவர் உயிரிழந்துள்ளார். மரணிக்கும் போது இவரது வயது 24 என கூறப்படுகின்றது. இவரது மரணம் தொடர்பில் எகிப்து அரசாங்க சுகாதாரப் பிரிவு எந்தவித அறிவிப்பையும் விடுக்கவில்லையென அல்ஜெஸீரா சர்தேச செய்திச் சேவை அறிவித்துள்ளது.
எகிப்து ஜனாதிபதி உயிரிழந்த சம்பவம் கடந்த ஜூன் 17 ஆம் திகதி இடம்பெற்றது. எகிப்தின் முதலாவது ஜனநாயக ரீதியிலான ஜனாதிபதியாக முஹம்மத் முர்சி கூறப்படுவதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.