அண்மையில் பதுளைத் தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்ததாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டி ருந்தது.
இந்தச் சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பௌத்த தேரர் ஒருவரை அச்சுறுத்தித் தாக்குதல் நடத்த முயற்சித்த தாக ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
சில மாதங்களுக்கு முன்னர், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஊவா மாகாண முதலமைச்சரை சந்திக்க மாகாண சபை வளாகத்திற்கு சென்றிருந்தனர்.
இதன் போது இருதரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுஇடம்பெற்றிருந்த போது சங்கத்தின் தலைவராக இருந்த ஞாணாநந்த தேரர் மீது முதலமைச்சர் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தேரரை தொடர்புகொண்டு வினவிய போது, தேரர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார்.
எவ்வாறாயினும், இது ஒரு மிக பெரிய சம்பவம் என குறிப்பிட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர், தான் தேரரை தாக்குவதற்கு முயற்சிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.