தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பது குறித்து தீர்மானம் நாளை எடுக்கப்படும்.
இந்த முடிவானது நாளை கொவிட்-19 தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியில் எட்டப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தன குறிப்பிட்டார்.
கொவிட்-19 வைரஸ் நிலைமை காரணமாக ஆகஸ்ட் 20 ஆம் திகதி நள்ளிரவு நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் ஆஸ்ட் 30 திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பில் எவ்வித மாற்றமுமில்லாத நிலையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.