கொவிட் வைரசு பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்’ கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளது.
எனினும் நாட்டில் தற்சமயம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன், உயிரிழப்புகளின் தொகையும் பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந் நிலையில் ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.