மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெறகூடாது என்பதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனையில் நேற்று இடம்பெற்ற பாடசாலை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே கோடீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த ஆட்சியிலேயே ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான் கடத்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளினால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
எனவே அவ்வாறான ஒரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதே எமது நிபை்பாடாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.