90 நிமிடங்காளாக ஒரு உளவு இயந்திரத்தைத் துரத்திப் பிடிப்பதற்குள் ஜோந்தார்மினர் பெரிதும் துன்பப்பட் சம்பவம் ஒன்று நேற்றுச் சனிக்கிழமை நடந்துள்ளது
31 வயதுடைய உள்வியல் தடுமாற்றம் (bipolaire) உள்ள ஒரு நபர் நோய்வாய்ப்படடிருந்தமையால், அவரை Blain (Loire-Atlantique) இலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக மருத்துவத் தாதியும் நோயாளர் காவு வாகனமும் வந்துள்ளன. ஆனால் அவர் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு மறுத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
அதனால் நேற்று, ஜோந்தார்மினரின் உதவியுடன் அவரை வைத்திசாலைக்குக் கொண்டு செல்ல மருத்துவ சேவையினர் வந்துள்ளனர்.
இவர்களைக் கண்டதும், இந்த உளவியல் பாதிப்பிற்குள்ளானவர், ஒரு உழவு இயந்திரத்தில் ஏறித் தப்பியோட ஆரம்பித்துள்ளனர்.
35 km/h வேகத்தில் Rougé (Loire-Atlantique) இலிருந்து Lalleu (Ille-et-Villaine) வரை ஜோந்தார்மினரால் இவரை நிறுத்த முடிந்திருக்கவில்லை. இவர்கள் போட்ட தடைகள் அனைத்தையும் உளவு இயந்திரம் தகர்த்தெறிந்துள்ளது.
இறுதியாக பாரிய தடை ஒன்றைப் போட்டே 90 நிமிடங்களின் பின்னர் இவரைத் தடுக்க முடிந்துள்ளது. அதன் பின்னர் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
30,35km/h வேகத்தில் சென்றாலும் கூட, ஓட ஆரம்பித்த உழவு இயந்திரத்தைத் தடுப்பது மிகவும் சிரமமான காரியம் என, Châteaubriant ஜோந்தார்ம் அணியின் கட்டளைத் தளபதி Sébastien Desbrest தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.