உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் 03ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற உள்ளது.
இதன்போது அடுத்துவரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான விஷேட தீர்மானங்கள் பல எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று நாளை மறுதினம் இடம்பெற உள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதா என்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.