உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பதின் மூன்றாவது சர்வதேச மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது .
யாழ் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை மிக விமர்சையாக கொண்டாடியது .நிகழ்வில் உலகின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான தமிழ் ஆர்வலர்களும் ,தமிழ் துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து கொண்டனர் – நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் கூரே ,தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா ,கல்வி அமைச்சர் இராதாகிருஸ்ணன் ,யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் விக்னேஸ்வரன் ,இந்திய மற்றும் உலகளாவிய உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க உறுப்பினர்கள் ,தமிழ் பற்றாளர்கள் ,தமிழ்த்துறை விரிவுரையாளர்கள் ,மற்றும் ,ஊடகம் சார்ந்தவர்கள் ,என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தனர் .
நிகழ்வினை கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் திரு .லலீசன் தொகுத்து வழங்கினார் .
17 நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த 168 பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வுகள் பத்து அமர்வுகளாக இடம்பெற்றது அறுபத்து நான்கு கட்டுரைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வாசிக்கப்பட்டது .தொடராக நாளைய தினம் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இரண்டாம் நாளும் இறுதி நாளுமான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன .