உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றிக்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணியை எதிர்த்து வெற்றி பெற்றது.
உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது சிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
இதில் ஹராரேவில் நேற்று (திங்கக்கிழமை) நடைபெற்ற தகுதிச் சுற்றிக்கான ஆட்டத்தில் சிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாட முடிவு தீர்மானித்தது.
அதன்படி சிம்பாப்வே அணி, 50 ஓவர்கள் முடிவில் 289 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பிரண்டன் டெய்லர் (138 ஓட்டம்) சதம் அடித்தார். சாலோமன் மிரே 45 ஓட்டங்களும், சீன் வில்லியம்ஸ் 34 ஓட்டங்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்களும், கெமார் ரோச் 3 விக்கெட்களும், கீமோ பால் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 290 ஓட்டங்களை எடுத்தது.
இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மார்லன் சாமுவேல்ஸ் 86 ஓட்டங்களும், ஷாய் ஹோப் 76 ஓட்டங்களும், எவின் லெவிஸ் 64 ஓட்டங்களும் எடுத்தனர். சிம்பாப்வே அணி பந்துவீச்சில் பிளெஸ்சிங் முசாரபானி, கிரேம் கிரீமர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்கிறமை குறிப்பிடத்தக்கது.