சீனாவின் செங்க்டூ நகரில் ‘உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான‘ விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.
மக்களுக்காக உயிரை பணையம் வைத்து இரவு, பகல் பணியாற்றும் காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கடந்த 1985ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் உலக நாடுகளை சேர்ந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொள்வர். அந்தவகையில் இந்த ஆண்டு, இந்நிகழ்ச்சியானது சீனாவின் சிச்சியான் மாகாணத்தில் தொடங்கியுள்ளது.
வருகிற 18ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விளையாட்டு போட்டியில் 79 நாடுகளை சேர்ந்த 10,000 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கென குத்துச்சண்டை, டார்ட்ஸ் உள்பட 60 விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் பணியிலிருக்கும் காவலர்கள் மட்டுமல்லாது, ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினரும் கலந்துக்கொள்ளலாம்.
இந்நிலையில் துவக்க நாளான நேற்று, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியபோது, சீனா கொடியுடன் அணிவகுத்து வந்த ஹாங்காங் காவலர்களுக்கு அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.