உலக அளவிலான தங்க முதலீட்டுக்கான தேவை கடந்த ஆண்டில் வெகுவாக குறைந்துள்ளதக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016-ம் ஆண்டில் தங்க முதலீட்டுக்கான தேவை 1595 மெட்ரிக் டன்னில் இருந்து என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு 1232 மெட்ரி டன்னாக குறைந்தது என்று தெரிவித்துள்ளது. அதே போல் 2016-ல் தங்கம் சார் பரிவர்த்தனை வர்த்தகம் 546.8 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் 2017-ம் ஆண்டு 202.8 மெட்ரிக் டன்னாக சரிந்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உலக அளவில் தங்கக்கட்டி, தங்க காசுக்கான தேவை ஒவ்வொரு வருடமும் 2 சதவீதம் குறைந்து வருவதாகவும் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.