உலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் பிரித்தானியாவின் என்தனி ஜோஷுவாவை வீழ்த்திய உக்ரைனின் ஒலெக்ஸாண்டர் உசிக் உலக அதிபார குத்துச் சண்டை சம்பியனானார்.
இங்கிலாந்தின் டொட்டன்ஹாமிலுள்ள ஹொட்ஸ்புர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் உலக பிரதித்திப் பெற்ற 31 வயதான என்தனி ஜோஷுவாவை முன்னாள் அதிபார சம்பியனான 34 வயதான ஒலெக்ஸாண்டர் உசிக் எதிர்கொண்டார்.
12 சுற்றுக்களைக் கொண்ட இந்த போட்டியில் மூன்று நடுவர்கள் மத்தியஸ்தம் வகித்ததனர். இதில் 117க்கு 112, 116 க்கு 112, 115க்கு113 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோஷுவாவை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தார் ஒலெக்ஸாண்ட் உசிக்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]