நாட்டின் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்களுக்கான மியன்மார் இராணுவத்தின் வன்முறையின் எதிர்வினை உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\
பெப்ரவரி 1 சதித் திட்டத்தின் பின்னர் மியன்மாரில் 800 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் பொலிஸார் மற்றும் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் தடுப்புக் காவலில் இறந்து விட்டனர் அல்லது கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வன்முறையின் பெருமளவான காட்சிகள் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான சர்வதேச வழக்குகளை ஆதரிக்க சக்திவாய்ந்த ஆதாரங்களை வழங்குகிறது.