கனடாவைச் சேர்ந்த ஆகனாகன் நிறுவனம், உலகிலேயே முதல் முறை மரபணு மாற்றப்பட்ட, நிறம் மாறாத ஆப்பிள்களை விளைவித்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
சாதாரண ஆப்பிள்களை நறுக்கும்போது அதில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுவதால், பாலிபினோல் ஆக்ஸிடேஸ் வேதி மாற்றம் அடைந்து சில நிமிடங்களில் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது.
சில ஆப்பிள் விரைவாகவும் சில ஆப்பிள் மெதுவாகவும் நிறம் மாறக்கூடியவை. ஆனால் ஆர்டிக் ஆப்பிள்களை நறுக்கி ஒரு நாள் ஆனாலும் பழுப்பு நிறமாக மாறுவதில்லை.