உலகின் மோசமான குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள முதல் ஐந்து பெண்மணிகளில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை ரகர் வீரர் வசீம் தாஜுடீன் 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் இறப்பு வாகன விபத்தாக கருதப்பட்ட போதிலும், தற்போது அது கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அவரது தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் அந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.