உலகில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக தனிப்பட்ட நபர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதும், சமூக வலைத்தளங்களின் ஊடாகா மிகவும் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடாத்துவதுமே இடம்பெறுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் நூற்றுக்கு 80 வீதமானவை பொய்யான தகவல்களே என சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
உலகில் எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்களும் ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதில்லையெனவும் உலகில் பலமான நாடுகளே அவற்றை உற்பத்தி செய்வதாகவும், அந்த நாடுகள் அவ்வாறு செய்யாது போனால், உலகில் பயங்கரவாதம் இல்லாது போய் விடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.