உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் மகிழ்ச்சியளவு, ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு, சமூக உதவி மற்றும் ஊழல் போன்ற காரணிகளை கருத்தில்கொண்டு இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் நோர்டிக் நாடான அதாவது, கடும் குளிர், குறைந்த சூரிய ஒளி போன்ற காலநிலைகளை கொண்ட பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து அடுத்த மூன்று இடங்களிலும் நோர்டிக் நாடுகளே உள்ளன. நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, ஆகிய நாடுகள் முறையே இரண்டு தொடக்கம் நான்கு வரை உள்ளன.
இதைதொடர்ந்து சுவிஸ்லாந்து ஐந்தாவது இடத்திலும், நெதர்லாந்து ஆறாவது இடத்திலும், நியூசிலாந்து எட்டாவது இடத்திலும், சுவீடன் ஒன்பதாவது இடத்திலும், அவுஸ்ரேலியா 10வது இடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன.