இத்தாலியில் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை பன்டோன் கேக் இல்லாமல் கொண்டாட மாட்டார்கள். பழங்கள், உலர்ந்த திராட்சை மற்றும் இனிப்பு கலந்து செய்யப்படும் இந்த கேக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
இந்நிலையில், இத்தாலியின் மிலன் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் மிகப்பெரிய கேக் செய்யப்பட்டுள்ளது. 140 கிலோ எடையுள்ள இந்த கேக் இரண்டு மீட்டர் உயரம் கொண்டுள்ளது. அதனை 1200 துண்டுகளாக வெட்டலாம்.
கேக்கை உருவாக்கியவர்கள் அதனை அலங்காரம் செய்து கடையில் பார்வைக்காக வைத்திருக்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய பன்டோன் கேக் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது வழக்கமான கேக்கை போல் இல்லாமல் சிறிது ஈரப்பதம் இன்றி காணப்படுகிறது. பெரிய அளவில் செய்வதற்காக இது மிகவும் மெதுவாக செய்யப்பட்டுள்ளது. கேக்கை செய்வதற்கு 36 மணி செலவாகியிருக்கிறது.
இத்தாலியின் பாரம்பரிய உணவான இந்த பன்டோன் கேக் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.