பருவ நிலை மாற்றத்தால் உலகளாவிய உணவு பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள எக்சாசடா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 122 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் உலக அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விவாதிக்கப்பட்டது.
மழை பொய்த்து, கடும் வறட்சி ஏற்பட்டு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பம் 2 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் பட்சத்தில் 76 சதவீதம் வளர்ந்து வரும் நாடுகளே உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.