உலகப் புகழ்பெற்ற பாடகி மாயா அருட்பிரகாசம் கனடாவில் அழுதார்! ஏதற்காக?

உலகப் புகழ்பெற்ற பாடகி மாயா அருட்பிரகாசம் கனடாவில் அழுதார்! ஏதற்காக?

சென்ற இடமெல்லாம் ஈழத்தமிழர்களிற்கான குரலாகவும், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே எனவும் துணிச்சலாகப் பேசி வரும் பாடகி மாயா அருட்பிரகாசம் கனடாவில் ஈழத்தமிழர்களின் நடத்தையால் அழுத சம்பவமொன்று வெளிக் கசிந்திருக்கின்றது.

கனடாவில் உள்ள தமிழ் வர்த்தக சம்மேளம் அதன் இருபத்தைந்தாவது ஆண்டைக் கொண்டாடு முகாமாக ஏராளமான பொருட்செலவில் ஒரு விழாவை நடத்தியிருந்தது. 50 ஆயிரம் டொலர்களிற்கு ஆங்கிலப் பத்திரிகை விளம்பரம்,

தமிழ் நடிகர் மாதவன், மற்றும் ஆங்கில பாடல் உலகை தனது திறமையால் ஆட்சி செய்து என்ற பெயரில் பிராகாசிக்கும் மாதங்கி அருட்பிரகாசம் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கெல்லாம் மேடை கிடைக்கிறதோ அங்கெல்லாம் தமிழர்களிற்காகப் பேசி வரும் மாயா கனடாவில் தமிழர்களின் மேடையில் பேசச் சென்ற போது தயவு செய்து இனப்படுகொலையைப் பற்றிப் பேச வேண்டாம் எனத் தடுக்கப்பட்டாராம்,

இதற்கான காரணம் மேற்படி வர்த்தகக்குழுவின் இயக்குனர் சபைக்குத் தெரியாமல் சிறீலங்காத் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகளில் அந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டு அவர்களிற்கு முன்வரிசை மரியாதை கொடுக்கப்பட்டதே காரணம் எனக் கூறப்படுகின்றது.

மிகவும் கனகச்சிதமாக சிறீலங்கா நலன்பேண் தமிழர்களால், குறிப்பாக மகிந்தா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்தி முடித்த கையோடு இலங்கை சென்று 25 ஆயிரம் டொலர்களை அவரிடம் கையளித்த ஒரு வியாபாரியே காரணம் காட்டப்படுகின்றார்.

தமிழர்களின் பேரால் இயங்கிவரும் இந்த வர்த்தக சம்மேளனத்தை சிறீலங்கா அரசு சார்பானதாக மாற்ற அவர்கள் பலமுறை முயன்று தோற்ற நிலையில் இந்தமுறைய நிகழ்வில் இவ்வாறானதொரு நிலைமை தமிழர்களிற்கு குரல் கொடுக்கும் ஒரு பாடகிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழர்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வர்த்தக ரீதியில் உச்சப்புகழ்பெற்று வெற்றிநடை போட இந்த அமைப்பில் வெறும் 156 அங்கத்தவர்களை மாத்திரம் வைத்திருப்பது அது வளர்ச்சி பெறவில்லை என்பதைக் காட்டுகின்றது.

எனவே ஏனைய தமிழ் வர்த்தகர்களும் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாகி இந்த அமைப்பின் தேர்தல் முறைகளில் கலந்து கொண்டு தங்களின் கட்டுப்பாட்டிற்குள் இந்த அமைப்பைக் கொண்டுவராவிட்டால் அந்த அமைப்பை சிறீலங்காத் தூதரகத்தின் துணை அமைப்பாக மாற்ற முயற்சிப்பவர்களின் கைகளில் விழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த அமைப்பிற்கான புதிய இயக்குனர் சபைத் தெரிவு அடுத்த வாரம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதனைத் தொடர்ந்தே பாடகி மாயா தொடர்பான விடயமும், இந்த அமைப்பை சிறீலங்காத் தூதரகத்தின் துணை அமைப்பாக மாற்ற விரும்புவோர் தொடர்பான விடயமும் வெளிவந்துள்ளது.

mia

M.I.A.'s fourth album, Matangi, is out now.

mia2

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News