உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இன்று (10) காலை நடைபெற்றது.
இதன்போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிவகு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், சோலமன் சிறில் இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர் சீ விகே சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், கஜதீபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகரன் நாவலன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் இறுதியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் பூ மரக்கன்றுகள் அப்பகுதியில் நட்டு வைக்கப்பட்டன.




