சமீபத்தில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தனது பேத்தியின் அருகே வாய் விட்டு கதறி அழும் ஒரு தாத்தாவின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்து பலரைக் கண்ணீர் விடச்செய்தது.
அந்த 5 வயது சிறுமி திங்கட்கிழமை காலமானாள்.
மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவள் காலமானாள்.
Braylynn என்ற அந்தச் சிறுமிக்கு அவளது தாயார், Beauty and the Beast என்னும் படத்தில் வரும் பெண்ணின் பெயரான “Belle” என்ற செல்லப்பெயரை வைத்திருந்தார்.
சிறுமியின் தாயான Ally Parker திங்கட்கிழமை மாலை Facebookஇல் வெளியிட்டிருந்த செய்தியில் ”இளவரசி Braylynn நம்மை விட்டுப் போய் விட்டாள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Braylynnஐ அடக்கம் செய்வதற்காக பலர் அவளுக்குப் பிடித்த “Belle”யின் உடையை அனுப்பியுள்ளனர்.
அவளது அடக்கம் ஒரு இளவரசியின் அடக்கத்தைப்போன்று செய்யப்படவுள்ளது.
புகைப்படத்தில் காணப்பட்ட அவளது தாத்தாவும் மிகுந்த நோய்வாய்ப்பட்டிருப்பதும், தானும் தனது பேத்தியும் நலமடைந்து சேர்ந்து உட்கார்ந்து My Little Pony என்ற படத்தைப் பார்ப்போம் என்று அவர் நம்பியதாகவும் சிறுமியின் தாய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.