உலகக் கோப்பை போட்டியின் போது நிர்வாணமாக ஓடுவேன் என்று ஏன் கூறினேன்? பிரபல நடிகை பளிச் பதில்
கடந்த 2011 ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் மோதின.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில், டெல்லியைச் சேர்ந்த பிரபல நடிகை பூணம் பாண்டே நிர்வாணமாக மைதானத்தை வலம் வருவதாகவும், இதற்கு பிசிசிஐ அனுமதி தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தர்.
அதற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் அது அத்தோடு முடிந்தது. தற்போது அன்று தான் எதற்காக அப்படி கூறினேன் என்று பூணம் பாண்டே தெரிவித்துள்ளார்.
அதில், பத்திரிக்கை உலகைச் சேர்ந்த நண்பர்களிடம் என்னுடைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினேன்.
ஏதாவது பெரிதாக செய்யவேண்டும் என்று தோன்றியது. 25 முதல் 30 காலண்டர்கள் தொடர்புடைய போட்டோஷுட்களில் கலந்துகொண்டுள்ளேன், அவை அனைத்தும் பெரிய நிறுவனங்கள், எனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கான்கள், கபூர்களிடம் நடித்த பல நடிகைகளைக் கவனித்தேன். அவர்களுக்கும் மக்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை.
அதன் பின்னர் தன் நண்பர்கள் எந்தப் பின்னணியும் இன்றி சினிமா துறையில் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் கிடைப்பது சிரமம்.
அதன் காரணமாக தனித்துவம் மற்றும் அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்றால் சர்ச்சையை உருவாக்கினால் மட்டுமே அவை சாத்தியம் என்று நம்பினேன். இதனால் தான் நான் அன்று அப்படிச் சொன்னேன் என கூறியுள்ளார்.