ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடங்கிவிட்டது, பலதரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்தாலும் அது தோனியிடமிருந்து வருவது போல் ஆகுமா என்றே ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த தோனி மகளிர் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது சில டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார்:
கிரிக்கெட் ஆட்டம் என்பது சிலபல மூடநம்பிக்கைகளைக் கொண்டது. சில வார்த்தைகள் குறித்து நானும் மூடநம்பிக்கை உள்ளவனே. அதனால் அந்த வார்த்தைகளை நான் கூறப்போவதில்லை.
ஆனால் நான் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்வேன், இது முக்கியமானது. முதலில், இந்த உலகக்கோப்பையில் மகளிர் இந்திய அணி அருமையாக ஆடியுள்ளனர்.
முக்கியம் என்னவெனில் இறுதிப் போட்டியில் ஆடும் இந்த உற்சாகத்தருணத்தை ஆரத்தழுவிக் கொள்ளுங்கள். அதாவது இறுதிக்கு முன்னேறியது, இறுதியில் வெற்றி பெறுவது என்ற இந்தச் சந்தர்பம். ஆட்டத்தின் முடிவில் கவனம் செலுத்த வேண்டாம். நாம் வென்றால், வெற்றி பெறாவிட்டால் என்ற சிந்தனைகளைத் தள்ளி வையுங்கள். முக்கியமானது என்னவெனில் அனைவரும் நல்ல பங்களிப்புச் செய்துள்ளீர்கள் என்பதே.
ஒரு அசாதாரண ஆட்டத்திறன் உலகக்கோப்பையை உங்கள் கைகளுக்கு கொண்டு வரப்போகிறது. அது ஒரு அபாரமான கேட்சாக இருக்கலாம், ஒரு நல்ல ரன் அவுட்டாக இருக்கலாம். ஒரு நல்ல இன்னிங்ஸாக இருக்கலாம், ஒரு நல்ல பந்து வீச்சாக இருக்கலாம். இங்குதான் அனைத்தும் திரண்டு வருகிறது.
அனைத்தையும் சாதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள், உலகக்கோப்பை இறுதியில் ஆடுவது என்பது அடிக்கடி நிகழ்வதல்ல, எனவே இந்தச் சந்தர்ப்பத்தை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள், இதுதான் கிரிக்கெட்டாகும். இது ஒருவிளையாட்டு, இதனை மகிழ்வுடன் ஆட வேண்டும்.
கண்டிப்பாக எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு, ஆனால் இந்த தினத்தை இந்தியாவுக்காக வரலாற்று தினமாக உருவாக்குவோம்.
இவ்வாறு கூறினார் தோனி.