உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
வர்த்தமானியின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும், அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க மீண்டும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது