உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய அரசிதழ் 9ஆம் திகதியிடப்பட்டே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் கடந்த 9ஆம் திகதி அரசிதழில் வெளியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
இருப்பினும் நேற்று வரையில் அரசிதழ் வெளியாகவில்லை.
ஆனாலும், உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய விபரங்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய அரசிதழ் 9ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.