அமெரிக்காவில் திருட்டில் ஈடுபட்டவரை போல உருவ ஒற்றுமை கொண்ட நபர் செய்யாத தவறுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் உள்ள ரோலண்ட் பார்க் வணிக வளாகத்தில் பொருட்களை திருடியதாக ரிச்சர்ட் அந்தோணி ஜோன்ஸ் என்ற நபருக்கு கடந்த 1999ல் நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
நான் திருடவில்லை என்றும், சம்பவம் நடந்த போது காதலியுடன் வேறு இடத்தில் இருந்ததாகவும் ரிச்சர்ட் எவ்வளவோ கூறியும் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
தண்டனை பெற்று சிறை சென்ற பின்னர், ரிச்சர்டை போலவே உருவ ஒற்றுமை கொண்ட நபர் ஒருவர் இருப்பது சிறைவாசிகள் மூலமாக அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்திய ரிச்சர்டுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது.
மேலும், ரிச்சர்ட் போலவே உருவ ஒற்றுமை கொண்ட நபரான ரிக்கி அந்த திருட்டில் ஈடுபட்டதை பொலிசார் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து ரிக்கியை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்கள்.