ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைவாக நிதியமைச்சரின் அனுமதியுடன் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கான விசேட வர்த்தக பொருள் வரியை ஒரு கிராமிற்கு30 ருபா என்ற அடிப்படையில் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்கில் இவ்வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க வர்த்தக பொருள் வரிச்சட்டத்தின் 2ஆவது அத்தியாயத்திற்கமைய 2260 கீழ் 72 இலக்கத்திலான வர்த்தமானி நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]