எல்ஜிபிடிகியு சமூகத்தினரின் சங்கமொன்றை பதிவு செய்ய மறுத்தமைக்காக கென்யாவின் உச்சநீதிமன்றம் அந்த நாட்டின் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சமூகங்களின் உரிமைகளை மறுக்கின்றது என நீதிமன்றம் சீற்றம் வெளியிட்டுள்ளது.
ஒருபாலின அமைப்புகள் கென்யாவில் சட்டவிரோதமானவை என்கின்ற போதிலும் அனைவருக்கும் ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு கென்யாவின் எல்ஜிபிடிகியு சமூகத்தினரின் தசாப்தகால சட்டபோராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகின்றது.
எல்ஜிபிடிகியு சமூகத்தை சேர்ந்த அமைப்பை பதிவு செய்ய மறுத்ததன் மூலம் அரசசார்பற்ற அமைப்புகளிற்கான அமைப்பு பாரபட்சமாக நடந்துகொண்டது என தெரிவித்துள்ள நீதிமன்றம்இதன் மூலம் அந்த சமூகத்தின் அரசமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்ட உரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் இயல்பானவை மனிதனாக இருப்பதன் காரணமாக அவை இயல்பானவை என தெரிவித்துள்ள நீதிமன்றம் எல்ஜிபிடிகியு சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து மனிதர்களும் எங்கள் அரசமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவி;ப்பதற்கு தகுதியானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்ப்பிற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.