2009 ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தம் இடம்பெற்ற வன்னி மண்ணில் இறந்த மக்களுக்கான 12 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழர்களால் கடைப்பிடிக்கபடுகிறது ,
ஆறாத வடுவும் தீராத சோகமும் நிறைந்த நம்மவர்களின் உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது .
காலத்தால் அழியாத சோக வரலாறை முள்ளிவாய்க்கால் மண்ணில் எழுதிடவோ அங்கே கூடி அழுதிடவோ உலக சூழலும் இனவாத சூழலும் ஒவ்வொரு வருடமும் இடைஞ்சல் தருவது காலத்தின் கொடுமைதான் .
ஆயினும் நம் மனங்களில் நினைவால் அவர்களை பூசிப்போம் .
நன்றி – கிருபா கிருசான்