உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவி கேட்டு வந்த யானை: நெகிழ வைக்கும் புகைப்படங்கள்
ஜிம்பாப்வேயில் வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்பி குண்டு அடிப்பட்டு பலத்த காயங்களுடன் வந்த யானை ஒன்றின் உயிரை மீட்டு மருத்துவக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.
ஜிம்பாப்வேயில் யானைகள் அதன் தந்தத்திற்காக வேட்டையாடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் பென் என்ற யானை ஒன்று புமி மலைப்பகுதியில் உள்ள லாட்ஜிற்கு குண்டு பாய்ந்த நிலையில் வந்து அங்குள்ள மனிதர்களிடம் உதவி கேட்டுள்ளது.
யானை உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவி கேட்பதை லாட்ஜின் மேலாளர் நிக் அறிந்தார். அங்குள்ள மருத்துவ குழுவினர் விடுமுறையில் சென்றுள்ளதால், 200 மைல் தூரம் உள்ள மருத்துவ குழுவுக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் அந்த இடத்தை வந்தடைய கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகிவிட்டது. இருப்பினும் அதுவரை அமைதியுடன் காத்திருந்தது அந்த யானை.
இதன் பின்னர் அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவ குழு அதன் முதுகுப்பகுதியில் ஆழமாக பாய்ந்திருந்த குண்டை அகற்றினர். தற்போது நல்ல நிலையில் இருக்கும் அந்த யானையின் உடல்நலத்தை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.