திருத்தம் செய்யப்பட்டு மீள நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்ப்பு வெளியிடப்படும்
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். .

இந்தச் சட்டமூலத்தில் எவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்குத் தமது தரப்பு எதிர்ப்பை வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.