சென் நதியின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருவதால், சில வீதிகள் மூடப்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை இல்-து-பிரான்சுக்குள் ஊடறுக்கு Seine மற்றும் Marne நதிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் சில வீதிகள், சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. தவிர, அடுத்த சில நாட்களில் நிலமை மேலும் மோசமடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Georges Pompidou வீதியானது, Garigliano பாலத்தில் இருந்து Bir-Hakeim பாலம் வரை தடைப்பட்டுள்ளது. நடைபாதையான Tuileries – Mazas மற்றும் Pont de l’Alma – Pont Royal ஒழுங்கைகளும் தடைப்பட்டுள்ளன. சென் நதியில் 3.70 மீட்டர்கள் உயரம் வரை நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.