உமா ஓயா பலநோக்கு வேலைத்திட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனு மீண்டும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
குறித்த திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர் சேதம் மற்றும் வீட்டு சேதம் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் உயர் நீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதேவேளை, உமா ஓயா வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டு இதுவரை இழப்பீடு கிடைக்கப்பெறாதவர்களின் தகவல்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்துக்கு சமர்பிக்கப்படவுள்ளதாக ஊவா மாகாண மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.