உதயன் சர்வதேச விருது வழங்கும் விழா மண்டபம் நிறைந்த விருந்தினர்கள் கலந்துகொண்ட ஓர் நிகழ்வாக இடம்பெற்றது. ஆறு முக்கியமான நன் மதிப்புடைய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வுகள் மிகவும் அசத்தலாக கண்கொள்ளா காட்சியாக அமைந்தன. கௌரவிப்பு சரியாக 8 மணியளவில் ஆரம்பமாகியது. நிகழ்சிகளை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கியதை அவதானிக்க முடிந்தது. சிறந்த வியாபார தலைமைத்துவ விருது நல்லதம்பி சங்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. உலகளாவிய ரீதியில், மிகக் கூடிய அளவில் தமிழர்கள் குடியேறிய நாடு கனடாவாகும். இங்கு 3 இலட்சத்திற்கு மேலான புலம் பெயர் தமிழர்கள் வாழ்கிறார்களென்பது குறிப்பிடத்தக்கது. பல்துறைக் கலாச்சாரத்தை மதிக்கின்ற கனடா நாட்டிலே தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் குறுகிய காலத்தில் அடைந்திருக்கின்ற வளர்ச்சி பலரையும் அவதானிக்க வைத்துள்ளது. புலம் பெயர் தமிழர்களின் மத்தியில், வணிகத்துறை வளர்ச்சி மேலோங்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதற்குப் பலவிதமான காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, ஆரம்ப கால கட்டங்களில் இங்கு பலவிதமான நிர்ப்பந்தங்களினால் குடியேறியவர்கள் தகுதியான கல்வியறிவு, சான்றிதழ்கள், அனுபவங்கள் இருந்தும், அவற்றை ஓழுங்காக எடுத்து வரவோ அல்லது பின்னர் எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களோ கிடைக்கவில்லை. பலருக்கு குறிக்கப்பட்ட துறைகளில், கேட்கப்படுகின்ற கனடிய அனுபவத்தையும், தகைமைகளையும் பெறுவது கடினமாக இருந்தது. இன்னும் சிலருக்கு இத்தகைய அனுபவத்தையும், தகைமைகளையும் பெறும்வரை குடும்பத்தை நிர்வகிப்பது, பொருளாதார ரீதியான கஷ்டங்களையும், மனக் கஷ்டங்களையும் அளித்தது. இப்படிப்பட்ட பலவிதமான காரணங்களினாலும், சிறிதாக வணிகத்துறையில் புகுந்து, தொழிலதிபர்களாக மாறியவர்களையும் காண்கின்றோம். இவ்வாறு சாதித்தவர்களை இனங்கண்டு ,அவைகளை கௌரவிக்கும் முயற்சியிலும் உதயன் விருது விழா வழங்கும் குழு மிகவும் அவதானமாக செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. சங்கர் நல்லதம்பி அவர்கள் மிகவும் கடின உழைப்பின் மூலம் சவால்களை கடந்து சாதனைகள் பல படைத்துவருகின்ற கனேடிய சமுதாயத்தின் ஓர் இளம் வியாபார வித்தகர். அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு இந்த உயரிய விருதினை வழங்கி கௌரவிப்பு செய்யப்பட்டது. சங்கர் அவர்கள் ஹோட்டல் துறையில் கால் பதித்து அந்த வியாபாரத்துறையில் வெற்றியும் கண்டவர்கள். தற்பொழுது ஒரு சில ஹோட்டல்களின் உரிமையாளராகவும் பங்காளராகவும், ஒரு சில ஹோட்டல்களை நிர்வகித்தும் வருகின்றார்கள். மேலாக ஷங்கர் அவர்கள் மிகவும் சிறந்த மனிதநேயம் கொண்ட பண்பாளர். கனடாவில் மட்டுமன்றி அயல் நாடான அமெரிக்காவரை அவர்கள் கலை மற்றும் ஆடம்பரமாக நடைபெறுகின்ற அனைத்து விழாக்களுக்கும் தேவையான வெளியூர் கலைஞர்கள் இங்கு வருகின்றபோது அவவ்ர்களை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பதுடன் அவர்களை மிகவும் வசதியாக தங்குவதற்குரிய ஹோட்டல்களை ஒழுங்குசெய்து கொடுப்பதில் அவருக்கு நிகர் யாரும் இல்லையெனலாம். மேலாக மிகவும் விஷேட கழிவு விலைகளில் ஹோட்டல்களின் கட்டணங்களை அறவிட்டு விழா நடத்துனருக்கு தங்களால் ஆனா உதவிகளை செய்து விழாக்களின் வெற்றிக்கு வழிசமைத்து வருவதுடன் சிறப்பான விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதற்குரிய பாதையினை வழிவகுத்துவருபவர். பல மாணவர்கள் மற்றும் ஹோட்டல் துறை சார்ந்த பல தமிழர்களுக்கு தொழில் வாய்ப்பினையும் ஏற்படுத்தி தமிழர்கள் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றுவருபவர். அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
Langes, FCPA, FCGA
EasyNews Latestnews
Easy24news.com