முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதில் இராஜதந்திர ரீதியிலான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதயங்கவை தம்மிடம் ஒப்படைக்குமாறு உக்ரைன் நாட்டு அதிகாரிகள் டுபாயிடம் வேண்டுகோ ள் விடுத்துள்ளனர்.
உதயங்க வீரதுங்க உக்ரைன் பிரஜை என்பதனால் அந்த நாட்டிலிருந்து உதயங்கவை இலங்கைக்கு அனுப்புமாறு உக்ரைன் டுபாயிடம் கேட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க டுபாயில் வைத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னாள் தூதுவரை அழைத்துவருவதற்கு இலங்கையிலிருந்து பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நேற்றைய தினம் டுபாயிற்கு செல்ல ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.