யுத்தம் இடம்பெற்ற பின்னரும், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் காணாமல்போதல்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரும், ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் காணாமல்போதல்கள் இடம்பெற்றன.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சமத்துவத்துடன் வாழும் சூழல் ஏற்படுத்தப்படவில்லை.
இனவாத முரண்பாடுகள் ஏற்படும் நிலைமை காணப்பட்டதுடன், மக்கள் அவநம்பிக்கையுடனும், சந்தேகத்துடனும், அச்சத்துடனும் வாழும் நிலையும் இருந்தது.
இந்த நிலையில், தாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் உலகின் பிரபல தலைவர்களை சந்தித்து, இலங்கையை கட்டியெழுப்ப அவர்களிடம் உதவி கோரினோம்.
இந்த நிலையிலேயே இலங்கைக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கின்றன.
எனவே, நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்படாதிருக்கும் நிலைமையை தோற்றுவிப்பதே தமது நோக்கம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.