உணவகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ‘Send Her Back’ என கூறுவோருக்கு இலவச உணவு வழங்கி வந்த அமெரிக்க உணவகம் தற்போது மக்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் அண்மையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பிக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டு, வெளியேறும்படி பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், தனது உணவகத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலும், கலிபோர்னியாவை சேர்ந்த சான்ட்விச் உணவகம் நடத்தும் ஜான் கனேசா என்பவர், நூதன முயற்சியை கையாண்டு பிரச்னையில் சிக்கியுள்ளார்.
இவர், ஜனநாயக கட்சியை சேர்ந்த இஹான் ஓமருக்கு எதிராக ‘சென்ட் ஹெர் பேக்’ கூறுவோருக்கு இலவசமாக சைடிஷ்கள் வழங்கப்படும் என கூறி முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதனால் ஈர்க்கப்பட்டு சிலர் அங்கு சென்றாலும், பலர் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் வடிக்கையாளர் வரத்து குறைந்ததால், கடையை மூடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.