வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இந்த சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்வதை முன்னிட்டு பூஜைகளும் இடம்பெற்று வருகின்றன.
முதலாம் இணைப்பு
வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைத்தெறியப்பட்ட விக்கிரகங்களை, வவுனியா நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி பிரதிஷ்ட்டை செய்யும் பூஜைகள் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (28.04.2023) புதிய விக்கிரகங்கள் மீள பிரதிஷ்ட்டை செய்யப்படவுள்ளமையினால் பக்தர்களை அதில் பங்கேற்குமாறும் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் நேற்று முன்தினம்(26.04.2023) ஆரம்பமாகி உள்ளன.
வெடுக்குநாறிமலை விக்கிரகங்கள் பிரதிஷ்ட்டை
வவுனியா வெடுக்குநாறிமலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (27.04.2023) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது விக்கிரகங்கள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாறிமலையிலிருந்த விக்கிரகங்கள் மற்றும் பூஜை பொருட்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இதன்படி, வெடுக்குநாறிமலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்ட்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் வவுனியா நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இவ்வாறானா சூழ்நிலையிலே இன்று வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைத்தெறியப்பட்ட விக்கிரகங்கள் மீள பிரதிஷ்ட்டை செய்வதற்கான பூஜைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – தமிழ்வின்