சப்ஜா விதையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும். செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி – 1
சப்ஜா விதை – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு
தேன் – தேவைக்கு
செய்முறை:
சப்ஜா விதையை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
தர்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தர்பூசணி ஜுஸ் உடன் சப்ஜா விதை, தேன், எலுமிச்சை சாறு, புதினா இலை சேர்த்து கலக்கவும்.
அதனை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு சுவைக்கவும்.