உடன்பிறப்புக்களிற்கு உதவும் குறிக்கோளுடன் சொந்த தொழில் ஆரம்பித்த 11-வயது பையன்.
கனடா-சஸ்கற்சுவான்.றிஜைனாவை சேர்ந்த பையன் ஒருவன் அவனது சமூகத்தில் அலைகளை ஏற்படுத்தியுள்ளான். அவனது கோடை விடுமுறையை வெறும் வேடிக்கையாக மட்டுமன்றி, தனது சொந்த தொழிலை ஆரம்பித்துள்ளான்.
11வயதுடைய ஜோனத்தன் மக்கினெ இரண்டு வாரங்களிற்கு முன்னர் புல் சமச்சீராக்கும் சொந்த தொழிலை ஆரம்பிக்க விரும்பினான்.
தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்து புல் அறுக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கித்தருமாறு கேட்டான்.
இவனது குடும்பம் இரண்டு மாதங்களிற்கு முன்னர் தான் மனிரோபாவிலிருந்து றிஜைனாவிற்கு குடி பெயர்ந்தனர்.அதனால் பாவித்த இயந்திரம் தான் தன்னால் வாங்க முடியும் என தந்தை தெரிவித்து வாங்கி கொடுத்தார்.
தனது மகன் தொழிலை தொடங்க உதவினார்.விளம்பரம் ஒன்றை உருவாக்கி மக்கள் ஒன்று சேரும் இடமான சனசமூக மையத்தில் பார்வைக்கு வெளியிட்டார்.
இரு வாரங்களிற்குள் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.கடந்த புதன்கிழமை ஜோனத்தன் 130டொலர்களை பெற்றான்.
தனது பணியை குறுக்கு வழியில் செய்ய தான் விரும்பவில்லை என கூறினான்.தொடர்ந்து செய்ய விரும்புவதாலும் வாடிக்கையாளர்கள் தனது பணியை விரும்ப வேண்டும் எனவும் அவன் விரும்பினான்.
மகனின் கடின உழைப்பு அவனிற்கு மட்டும் பலனளிக்கவில்லை அவனது இளைய சகோதரிகள் மூவருக்கும் பயனளித்தது என தந்தையார் தெரிவித்தார்.
சகோதரிகள் மூவரும் நீச்சலிற்கு செல்ல உதவினான்.இவனது இரக்க குணத்தை எண்ணி தந்தையும் தாயும் பெருமை அடைந்தனர்.
கோடை காலம் முழுவதும் தொடர்ந்து தனது தொழிலை செய்யப்போவதாக ஜோனத்தன் தெரிவித்தான்.சஸ்கற்சுவான் காற்பந்தாட்ட அணியான Roughriders-ன் விளையாட்டை தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் கண்டு களிக்க தேவையான பணத்தை சேகரிக்க முடியுமென தான் நம்புவதாக தெரிவித்தான்.