இலங்கையில் (Srilanka) விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் முச்சக்கர வண்டி இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி திருத்தத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பை காண முடியும் என இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெரேரா (Andrew Pereira) தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, புதிய முச்சக்கர வண்டியின் விலை சுமார் 650,000 ரூபாயினால் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிதாக இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளின் விலை 700,000 ரூபாயாக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய முச்சக்கர வண்டியின் விலை
இந்நிலையில், இலங்கையில் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமொன்று முச்சக்கர வண்டிகளுக்கான முன்கூட்டிய ஓடர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனம் அறிந்தவண்ணம், புதிய பஜாஜ் முச்சக்கர வண்டியின் விலை, பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர்த்து ரூ.16,90,678 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பெறுமதி வரி சேர்க்கப்பட்டு, ஒரு புதிய முச்சக்கர வண்டியின் விலை ரூ.19,95,225 எனத் தெரிவிக்கப்படுகின்றது.